குர்ஆன் 35:41 — துவக்குபவர்
கடவுள் தான் வானங்கள் மற்றும் பூமியை, அவை மறைந்திடாதவாறு பிடித்துக் கொண்டிருப்பவர். வேறு எவரேனும் ஒருவர் அவற்றைப் பிடிப்பதாக இருந்தால், மிகவும் உறுதியாக அவை மறைந்து போய்விடும். அவர் கனிவானவர், மன்னிப்பவர்.
[35:40] “கடவுள்-உடன் நீங்கள் அமைத்துக் கொண்ட இணைத் தெய்வங்களைச் சிந்தித்துப் பாருங்கள்; பூமியின் மீது அவர்கள் எதனைப் படைத் திருக்கின்றனர் என்று எனக்குக் காட்டுங்கள்” என்று கூறுவீராக. வானங்களில் ஏதேனும் பங்குரி மையை அவர்கள் சொந்தமாகக் கொண்டிருக் கின்றனரா? அதில் சந்தேகம் எதுவும் இல்லாத ஒரு புத்தகத்தை நாம் அவர்களுக்குத் தந்திருக் கின்றோமா? உண்மையில், வரம்பு மீறுபவர்கள் ஒருவர் மற்றவருக்கு அளிக்கும் வாக்குறுதி ஒரு மாயை என்பதை விட அதிகம் எதுவுமில்லை.
[35:42] ஓர் எச்சரிப்பவர் அவர்களிடம் வந்தால், குறிப்பிட்ட தொரு கூட்டத்தாரைவிட சிறப்பாக வழிநடத்தப் பட்டவர்களாக அவர்கள் இருப்பார்கள் என அவர்கள் கடவுள்-ன் மீது முறைப்படியான சத்தியம் செய்தனர்! அந்த எச்சரிப்பவர் இப்போது அவர்களிடம் வந்து விட்டார், ஆயினும், இது அவர்களை வெறுப்பிற்குள் ஆழமாக ஆழ்த்த மட்டுமே செய்தது.