Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 35:42 — துவக்குபவர்

ஓர் எச்சரிப்பவர் அவர்களிடம் வந்தால், குறிப்பிட்ட தொரு கூட்டத்தாரைவிட சிறப்பாக வழிநடத்தப் பட்டவர்களாக அவர்கள் இருப்பார்கள் என அவர்கள் கடவுள்-ன் மீது முறைப்படியான சத்தியம் செய்தனர்! அந்த எச்சரிப்பவர் இப்போது அவர்களிடம் வந்து விட்டார், ஆயினும், இது அவர்களை வெறுப்பிற்குள் ஆழமாக ஆழ்த்த மட்டுமே செய்தது.

[35:41] கடவுள் தான் வானங்கள் மற்றும் பூமியை, அவை மறைந்திடாதவாறு பிடித்துக் கொண்டிருப்பவர். வேறு எவரேனும் ஒருவர் அவற்றைப் பிடிப்பதாக இருந்தால், மிகவும் உறுதியாக அவை மறைந்து போய்விடும். அவர் கனிவானவர், மன்னிப்பவர்.

[35:43] பூமியின் மீது ஆணவத்தையும், மேலும் தீய சூழ்ச்சிகளையும் அவர்கள் மேற்கொண்டனர், மேலும் தீய சூழ்ச்சிகள் அவற்றைச் சூழ்ச்சி செய்பவர்களை மட்டுமே திருப்பித் தாக்கும். கடந்த காலங்களில் இதே விஷயங்களைச் செய்தவர்களுக்கு நேர்ந்த விதியைத் தவிர வேறெதையும் அவர்கள் பின்னர் எதிர்பார்க்க முடியுமா? கடவுள்-ன் வழிமுறை ஒருபோதும் மாற்ற முடியாதது என்பதை நீர் கண்டு கொள்வீர்; கடவுள்-ன் வழிமுறை மாறாதது என்பதை நீர் கண்டு கொள்வீர்.