Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 35:43 — துவக்குபவர்

பூமியின் மீது ஆணவத்தையும், மேலும் தீய சூழ்ச்சிகளையும் அவர்கள் மேற்கொண்டனர், மேலும் தீய சூழ்ச்சிகள் அவற்றைச் சூழ்ச்சி செய்பவர்களை மட்டுமே திருப்பித் தாக்கும். கடந்த காலங்களில் இதே விஷயங்களைச் செய்தவர்களுக்கு நேர்ந்த விதியைத் தவிர வேறெதையும் அவர்கள் பின்னர் எதிர்பார்க்க முடியுமா? கடவுள்-ன் வழிமுறை ஒருபோதும் மாற்ற முடியாதது என்பதை நீர் கண்டு கொள்வீர்; கடவுள்-ன் வழிமுறை மாறாதது என்பதை நீர் கண்டு கொள்வீர்.

[35:42] ஓர் எச்சரிப்பவர் அவர்களிடம் வந்தால், குறிப்பிட்ட தொரு கூட்டத்தாரைவிட சிறப்பாக வழிநடத்தப் பட்டவர்களாக அவர்கள் இருப்பார்கள் என அவர்கள் கடவுள்-ன் மீது முறைப்படியான சத்தியம் செய்தனர்! அந்த எச்சரிப்பவர் இப்போது அவர்களிடம் வந்து விட்டார், ஆயினும், இது அவர்களை வெறுப்பிற்குள் ஆழமாக ஆழ்த்த மட்டுமே செய்தது.

[35:44] இவர்கள் பூமியில் சுற்றித்திரிந்து இவர்களுக்கு முன் சென்றவர்களுக்கு நேர்ந்த விளைவுகளைக் கவனித்துப் பார்க்கவில்லையா? இவர்களை விடவும் வலிமை மிக்கவர்களாக அவர்கள் இருந்தனர். வானங்களிலோ, அன்றி பூமியின் மீதோ கடவுள்-இடமிருந்து எந்த ஒன்றும் மறைக்கப்பட்டு விட முடியாது. அவர் எல்லாம் அறிந்தவர், சர்வ சக்தியுடையவர்.