குர்ஆன் 35:44 — துவக்குபவர்
இவர்கள் பூமியில் சுற்றித்திரிந்து இவர்களுக்கு முன் சென்றவர்களுக்கு நேர்ந்த விளைவுகளைக் கவனித்துப் பார்க்கவில்லையா? இவர்களை விடவும் வலிமை மிக்கவர்களாக அவர்கள் இருந்தனர். வானங்களிலோ, அன்றி பூமியின் மீதோ கடவுள்-இடமிருந்து எந்த ஒன்றும் மறைக்கப்பட்டு விட முடியாது. அவர் எல்லாம் அறிந்தவர், சர்வ சக்தியுடையவர்.
[35:43] பூமியின் மீது ஆணவத்தையும், மேலும் தீய சூழ்ச்சிகளையும் அவர்கள் மேற்கொண்டனர், மேலும் தீய சூழ்ச்சிகள் அவற்றைச் சூழ்ச்சி செய்பவர்களை மட்டுமே திருப்பித் தாக்கும். கடந்த காலங்களில் இதே விஷயங்களைச் செய்தவர்களுக்கு நேர்ந்த விதியைத் தவிர வேறெதையும் அவர்கள் பின்னர் எதிர்பார்க்க முடியுமா? கடவுள்-ன் வழிமுறை ஒருபோதும் மாற்ற முடியாதது என்பதை நீர் கண்டு கொள்வீர்; கடவுள்-ன் வழிமுறை மாறாதது என்பதை நீர் கண்டு கொள்வீர்.
[35:45] மனிதர்களை அவர்களுடைய பாவங்களுக்காகக் கடவுள் தண்டித்தால், பூமியின் மீது ஒரு உயிர்ப்பிராணியையும் அவர் விட்டு விட மாட்டார். ஆனால் முன்னரே தீர்மானிக்கப்பட்ட ஒருதவணை வரை அவர்களுக்கு அவர் அவகாசம் அளிக் கின்றார். அவர்களுடைய தவணை பூர்த்தியாகி விட்டவுடன், பின்னர் கடவுள் தன் அடியார்களைப் பார்ப்பவராக இருக்கின்றார்.