Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 35:45 — துவக்குபவர்

மனிதர்களை அவர்களுடைய பாவங்களுக்காகக் கடவுள் தண்டித்தால், பூமியின் மீது ஒரு உயிர்ப்பிராணியையும் அவர் விட்டு விட மாட்டார். ஆனால் முன்னரே தீர்மானிக்கப்பட்ட ஒருதவணை வரை அவர்களுக்கு அவர் அவகாசம் அளிக் கின்றார். அவர்களுடைய தவணை பூர்த்தியாகி விட்டவுடன், பின்னர் கடவுள் தன் அடியார்களைப் பார்ப்பவராக இருக்கின்றார்.

[35:44] இவர்கள் பூமியில் சுற்றித்திரிந்து இவர்களுக்கு முன் சென்றவர்களுக்கு நேர்ந்த விளைவுகளைக் கவனித்துப் பார்க்கவில்லையா? இவர்களை விடவும் வலிமை மிக்கவர்களாக அவர்கள் இருந்தனர். வானங்களிலோ, அன்றி பூமியின் மீதோ கடவுள்-இடமிருந்து எந்த ஒன்றும் மறைக்கப்பட்டு விட முடியாது. அவர் எல்லாம் அறிந்தவர், சர்வ சக்தியுடையவர்.