Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 39:2 — மக்கள் கூட்டங்கள்

சத்தியத்துடன், இந்த வேதத்தை உமக்கு நாம் இறக்கி அனுப்பியுள்ளோம்; கடவுள்-க்கு மட்டுமே உங்கள் மார்க்கத்தை அர்ப்பணித்துக் கொண்டவர் களாக, நீங்கள் அவரை வழிபட வேண்டும்.

[39:1] இது சர்வ வல்லமையுடையவரும், ஞானம் நிறைந்தவருமான, கடவுள்-இடமிருந்து வந்த வேதத்தின் ஒரு வெளிப்பாடாகும்.

[39:3] நிச்சயமாக, மார்க்கம் கடவுள்-க்கு மட்டுமே அர்ப்பணிக்கப்படவேண்டும். அவருடன் இணைத் தெய்வங்களை அமைத்துக் கொள்பவர்கள், “கடவுள்-க்கு நெருக்கமாக எங்களைக் கொண்டு செல்வதற்காகவே நாங்கள் அவர்களை இணைத்தெய்வ வழிபாடு செய்கின்றோம்; ஏனெனில் அவர்கள் மேலானதொரு நிலையில் இருக்கின்றார்கள்!” என்று கூறுகின்றார்கள். அவர்களுடைய தர்க்கங்கள் குறித்து கடவுள் அவர்களுக்குத் தீர்ப்பளிப்பார். இத்தகைய பொய்யர்களை, நம்ப மறுப்பவர்களைக் கடவுள் வழிநடத்துவதில்லை.