குர்ஆன் 39:70 — மக்கள் கூட்டங்கள்
ஒவ்வொரு ஆன்மாவும் அது செய்தவற்றிற் கான கூலி கொடுக்கப்படும், ஏனெனில் அவர் கள் செய்த ஒவ்வொன்றையும் அவர் முற்றிலும் அறிந்திருக்கின்றார்.
[39:69] பின்னர் பூமி தன் இரட்சகரின் ஒளியால் பிரகாசி க்கும். பதிவேடு வெளிப்படையாக தெரிவிக்கப் படும், மேலும் வேதம் வழங்கப்பட்டவர்களும் மற்றும் சாட்சிகளும் முன் கொண்டு வரப்படு வார்கள். சிறிதளவும் அநீதமின்றி, ஒவ்வொரு வரும் நியாயமாகத் தீர்ப்பளிக்கப்படுவார்கள்.
[39:71] நம்ப மறுப்பவர்கள் நரகத்திற்கு கூட்டம் கூட்டமாக வழிநடத்தப்படுவார்கள். அவர்கள் அதனை அடைந்து, மேலும் அதன் வாயில்கள் திறக்கப்படும் பொழுது, அதன் காவலர்கள், “உங்கள் இரட்சகருடைய வெளிப்பாடுகளை உங்களுக்கு ஓதிக்காட்டிய, மேலும் இந்த நாளின் சந்திப்பைக் குறித்து உங்களை எச்சரித்த தூதர்களை, உங்களிலிருந்தே நீங்கள் பெற்றுக்கொள்ளவில்லையா?” என்று கூறுவார்கள். அவர்கள், “ஆம் உண்மையில். ஆனால் நம்ப மறுப்பவர்கள் மீது ‘தண்டனை’ எனும் வார்த்தை ஏற்கனவே முத்திரையிடப்பட்டு விட்டது” என்று பதிலளிப்பார்கள்.