குர்ஆன் 4:104 — பெண்கள்
எதிரியைத் தேடிச் செல்வதில் தடுமாறாதீர்கள். நீங்கள் துன்புற்றால், அவர்களும்தான் துன்புறு கின்றார்கள், ஆயினும் அவர்கள் ஒரு போதும் எதிர்பார்க்காததை கடவுள்-இடமிருந்து நீங்கள் எதிர்பார்க்கின்றீர்கள். கடவுள் எல்லாம் அறிந்தவர், ஞானம் மிக்கவர்.
[4:103] நீங்கள் உங்களுடைய தொடர்புத் தொழுகையை (ஸலாத்) நிறைவு செய்தவுடன், நின்ற நிலையிலோ, அமர்ந்த நிலையிலோ அல்லது படுத்த நிலையிலோ* நீங்கள் கடவுள்-ஐ நினைவு கூர்ந்திட வேண்டும். போர் முடிந்தவுடன் நீங்கள் தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும்; தொடர்புத் தொழுகை கள் (ஸலாத்) நம்பிக்கையாளர்கள் மீது குறிப்பிட்ட நேரங்களில் விதியாக்கப்பட்டுள்ளது.
[4:105] கடவுள் உங்களுக்கு காண்பித்து இருப் பவற்றிற்கு இணங்க மக்கள் மத்தியில் தீர்ப்புச் செய்வதற்காக, சத்தியத்துடன், இவ்வேதத்தை நாம் உங்களுக்கு இறக்கி அனுப்பியுள்ளோம். துரோகிகளுடன் நீங்கள் அணி சேர வேண்டாம்.