குர்ஆன் 4:135 — பெண்கள்
يٰأَيُّهَا الَّذينَ ءامَنوا كونوا قَوّٰمينَ بِالقِسطِ شُهَداءَ لِلَّهِ وَلَو عَلىٰ أَنفُسِكُم أَوِ الوٰلِدَينِ وَالأَقرَبينَ ۚ إِن يَكُن غَنِيًّا أَو فَقيرًا فَاللَّهُ أَولىٰ بِهِما ۖ فَلا تَتَّبِعُوا الهَوىٰ أَن تَعدِلوا ۚ وَإِن تَلوۥا أَو تُعرِضوا فَإِنَّ اللَّهَ كانَ بِما تَعمَلونَ خَبيرًا
நம்பிக்கை கொண்டோரே, நீங்கள் சாட்சியம் அளிக்கும்போது உங்களுக்கோ, அல்லது உங்கள் பெற்றோருக்கோ, அல்லது உங்கள் உறவினர்களுக்கோ கூட எதிரானதாக இருந்தாலும் நீங்கள் முற்றிலும் நேர்மையுடன் இருக்க வேண்டும், மேலும் கடவுள்-ஐ கவனத்தில் கொள்ள வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவர் பணக்காரராகவோ அல்லது ஏழையாகவோ இருந்தாலும் கடவுள் அவ்விருவரையும், கவனத்தில் கொள்கின்றார். ஆகையால், உங்கள் தனிப்பட்ட விருப்பங்களினால் பாரபட்சமாகிவிடாமல் இருங்கள். (இக்கட்டளையில்) நீங்கள் விலகிச் சென்றாலோ அல்லது அலட்சியம் செய்தாலோ, பின்னர் நீங்கள் செய்கின்ற ஒவ்வொன்றையும் கடவுள் முற்றிலும் நன்கறிந்தவராக இருக்கின்றார்.
[4:134] எவர் ஒருவர் இவ்வுலகின் பொருட்களைத் தேடுகின்றாரோ அவர், கடவுள் தான் இவ்வுலகம் மற்றும் மறுவுலகம் ஆகிய இரண்டின் பொருட்களையும் கொண்டிருக்கின்றார் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். கடவுள் செவியேற்பவர், பார்ப்பவர்.
[4:136] நம்பிக்கை கொண்டோரே, நீங்கள் கடவுள் மீதும், அவருடைய தூதர் மீதும், மேலும் அவருடைய தூதரின் மூலம் அவர் வெளிப் படுத்திய வேதத்தின் மீதும், அதற்கு முன்பு அவர் வெளிப்படுத்திய வேதத்தின் மீதும் நம்பிக்கை கொள்ள வேண்டும். எவர் ஒருவர் கடவுள் மீதும், அவருடைய வானவர்கள் மீதும், அவருடைய வேதங்கள் மீதும், அவருடைய தூதர்கள் மீதும், இன்னும் இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொள்ள மறுக்கின்றாரோ அவர் உண்மையில் வழிகேட்டில் வெகுதூரம் சென்று விட்டார்.