Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 4:176 — பெண்கள்

அவர்கள் உம்மிடம் ஆலோசிக்கின்றார்கள், “தனிநபர் சம்பந்தமாக கடவுள் உங்களுக்கு அறிவுறுத்துகின்றார். ஒருவர் குழந்தைகள் இல்லாதிருந்து இறந்துவிட்டால் மேலும் அவர் ஒரு சகோதரியைக் கொண்டிருந்தால், வாரிசுரி மையில் பாதியை அவள் அடைவாள். அவள் முதலில் இறந்து, அவளுக்கு குழந்தைகள் இல்லா திருந்தால், அவர் அவளின் வாரிசுரிமையை அடைவார். இரண்டு சகோதரிகள் இருந்தால், அவர்கள் வாரிசுரிமையில் மூன்றில் இரண்டினை அடைவர். உடன் பிறப்புகள் ஆண்களாகவும், பெண்களாகவும் இருந்தால், பெண்ணின் பங்கைப் போன்று இரண்டு மடங்கை ஆண் அடைவார்” என்று கூறுவீராக. நீங்கள் வழி தவறி விடாமல் இருப்பதற்காகக் கடவுள் இவ்விதமாக உங்களுக்குத் தெளிவுபடுத்துகின்றார், கடவுள் அனைத்து விஷயங்களையும் முற்றிலும் அறிந்தவராக இருக்கின்றார்.

[4:175] எவர்கள் கடவுள் மீது நம்பிக்கை கொண்டு, மேலும் அவரை உறுதியாகப்பற்றிக் கொள்கின்றார்களோ அவர்களை அவர் தன்னுடைய கருணை மற்றும் கிருபையினுள் நுழையச் செய்வார், மேலும், அவர்களைத் தன்பால் ஒரு நேரான பாதையில் வழி நடத்துவார்.