Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 40:21 — மன்னிப்பவர்

அவர்கள் பூமியைச் சுற்றிப்பார்த்து தங்களுக்கு முன்னிருந்தவர்களுக்கு நேர்ந்த விளைவு களைக் கவனிக்கவில்லையா? அவர்கள் இவர்களை விடவும் வலிமையுள்ளவர் களாகவும், மேலும் பூமியின் மீது அதிகம் விளைவித்தவர்களாகவும் இருந்தனர். ஆனால் கடவுள் அவர்களுடைய பாவங்களுக்காக அவர்களைத் தண்டித்தார், மேலும் கடவுள் - இடமிருந்து எந்த ஒன்றும் அவர்களைப் பாதுகாக்க முடியவில்லை.

[40:20] கடவுள் நியாயமாகத் தீர்ப்பளிக்கின்றார், அதே சமயம் அவருடன் அவர்கள் இறைஞ்சுகின்ற இணைத் தெய்வங்கள் எந்த ஒன்றிற்கும் தீர்ப்பளிக்க இயலாது. கடவுள் தான் செவியேற்பவராகவும், பார்ப்பவராகவும்

[40:22] அது ஏனெனில், அவர்களுடைய தூதர்கள் அவர்களிடம் தெளிவான சான்றுகளுடன் சென்றனர், ஆனால் அவர்கள் நம்ப மறுத்தனர். அதன் விளைவாக, கடவுள் அவர்களைத் தண்டித்தார். அவர் பலம் மிக்கவர், தண்டனை யை நிறைவேற்றுவதில் கண்டிப்பானவர்.