குர்ஆன் 40:33 — மன்னிப்பவர்
“புறங்காட்டித் திரும்பித் தப்பியோட நீங்கள் விரும்பக் கூடிய நாள் அதுவாகும். ஆனால் அப்போது கடவுள்-இடமிருந்து எந்த ஒன்றும் உங்களைக் காப்பாற்றாது. கடவுள் எவரை வழிகேட்டில் அனுப்புகின்றாரோ, அவரை எந்த ஒன்றும் வழிநடத்த இயலாது.”
[40:32] “என் சமூகத்தாரே, ஒன்று கூட்டுகின்ற அந்த நாளை உங்களுக்கு நான் அஞ்சு கின்றேன்.
[40:34] அதற்கு முன்னர் ஜோஸஃப் தெளிவான வெளிப்பாடுகளுடன் உங்களிடம் வந்திருந் தார், ஆனால் நீங்கள் அவருடைய தூதுச் செய்தியைத் தொடர்ந்து சந்தேகித்துக் கொண்டிருந்தீர்கள். பின்னர், அவர் இறந்து விட்ட பொழுது நீங்கள், “அவருக்குப் பின்னர் வேறு எந்தத் தூதரையும் கடவுள் அனுப்பமாட்டார். (அவர் தான் இறுதித் தூதர்!)”** என்று கூறினீர்கள். கடவுள் இவ்விதமாக வரம்பு மீறுபவர்களையும், சந்தேகிப்பவர்களையும் வழிகேட்டில் அனுப்பி விடுகின்றார்.