குர்ஆன் 41:21 — விவரிக்கப்பட்டது
அவர்கள் தங்கள் தோல்களிடம், “ஏன் நீங்கள் எங்களுக்கெதிராகச் சாட்சியம் அளித் தீர்கள்?” என்று கூறுவார்கள். அவை, “கடவுள் எங்களைப் பேசச் செய்தார்; அவர்தான் ஒவ்வொன்றையும் பேசச் செய்கின்றார். அவர் தான் உங்களை முதல் முறை படைத்தவர், மேலும் இப்போது நீங்கள் அவரிடமே திரும்பக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றீர்கள்” என்று பதிலளிக்கும்.
[41:20] அவர்கள் அங்கே சென்றடைந்தவுடன், அவர் களுடைய சொந்தச் செவிப்புலன், கண்கள், மற்றும் தோல்கள் அவர்கள் செய்த ஒவ்வொன்றிற்கும் சாட்சி கூறும்.
[41:22] உங்களுடைய சொந்தச் செவிப்புலன், உங்களு டைய கண்கள், அல்லது உங்களுடைய தோல் கள் ஆகியவற்றிலிருந்து நீங்கள் மறைத்துக் கொள்ள எந்த வழியுமில்லை. உண்மையில், கடவுள் நீங்கள் செய்கின்றவற்றில் அதிக மானதை அறியாமல் இருக்கின்றார் என்று நீங்கள் நினைத்துக் கொண்டீர்கள்.