Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 41:48 — விவரிக்கப்பட்டது

அவர்கள் இணைத்தெய்வ வழிபாடு செய்த அந்த இணைத்தெய்வங்கள் அவர்களைக் கைவிட்டு விடும், மேலும் தப்பித்துக் கொள்ளுதல் இல்லை என்பதை அவர்கள் தெளிவாக அறிந்து கொள்வார்கள்.

[41:47] அந்த நேரம் (உலகத்தின் முடிவு)* பற்றிய அறிவு அவரிடமே உள்ளது. அவருடைய அறிவு இல்லா மல், பழங்கள் எதுவும் அவற்றின் பாளைகளி லிருந்து வெளிவருவதில்லை, அன்றி எந்தப் பெண்ணும் கருத்தரிப்பதோ அல்லது பிரசவிப் பதோ இல்லை. அவர்களை அவர்: “என்னுடன் நீங்கள் அமைத்துக் கொண்ட அந்த இணைத் தெய்வங்கள் எங்கே?” என்று கேட்கின்ற அந்நாள் வரும். அவர்கள், “எங்களில் எவருமே அதற்குச் சாட்சி கூறுபவர்கள் இல்லை என்று நாங்கள் உம்மிடம் பிரகடனம் செய்கின்றோம்” என்று கூறுவார்கள்.

[41:49] நல்ல விஷயங்களுக்காக இறைஞ்சுவதில் மனிதன் ஒருபோதும் சோர்வடைவதில்லை. ஆனால் அவனுக்குத் துன்பங்கள் நேரிட்டால், அவன் மனத்தளர்ச்சியடைந்தவனாகவும், நிராசையடைந்தவனாகவும்ஆகிவிடுகின்றான்.