குர்ஆன் 41:49 — விவரிக்கப்பட்டது
لا يَسـَٔمُ الإِنسٰنُ مِن دُعاءِ الخَيرِ وَإِن مَسَّهُ الشَّرُّ فَيَـٔوسٌ قَنوطٌ
நல்ல விஷயங்களுக்காக இறைஞ்சுவதில் மனிதன் ஒருபோதும் சோர்வடைவதில்லை. ஆனால் அவனுக்குத் துன்பங்கள் நேரிட்டால், அவன் மனத்தளர்ச்சியடைந்தவனாகவும், நிராசையடைந்தவனாகவும்ஆகிவிடுகின்றான்.
[41:48] அவர்கள் இணைத்தெய்வ வழிபாடு செய்த அந்த இணைத்தெய்வங்கள் அவர்களைக் கைவிட்டு விடும், மேலும் தப்பித்துக் கொள்ளுதல் இல்லை என்பதை அவர்கள் தெளிவாக அறிந்து கொள்வார்கள்.
[41:50] மேலும், சில துன்பங்களை அனுபவித்த பின்னர் அவனுக்கு நாம் அருள்புரிந்தால், அவன், “இது எனக்குரியதே ஆகும். அந்த நேரம் எப்பொழுதேனும் நிகழ்ந்தேறும் என்று நான் நம்பவில்லை. என் இரட்சகரிடம் நான் திரும்பிச் சென்றாலும் கூட, அவரிடமும் நான் மேலான வற்றையே அடைவேன்” என்று கூறுகின்றான். மிகவும் உறுதியாக, நம்ப மறுப்பவர்களுக்கு அவர்களுடைய அனைத்துக் காரியங்களைப் பற்றியும் நாம் தெரிவிப்போம், மேலும் கடுமையான தண்டனைக்கு அவர்களை உட்படுத்துவோம்.