Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 42:16 — கலந்தாலோசித்தல்

எவர்கள் அவருடைய தூதுச் செய்தியைப் பெற்ற பின்னர், கடவுள்-ஐப் பற்றித் தர்க்கிக் கின்றனரோ, அவர்களுடைய தர்க்கம் அவர் களுடைய இரட்சகரிடத்தில் செல்லாததாக ஆக்கப்பட்டு விட்டது. அவர்கள் தண்டித் தலுக்கு உள்ளாகிவிட்டனர், மேலும் கடுமை யானதொரு தண்டனைக்குத் தகுதியாகி விட்டனர்.

[42:15] இதனைத்தான் நீர் பிரச்சாரம் செய்ய வேண்டும், மேலும் நீர் செய்துவர வேண்டு மென உமக்கு கட்டளையிடப்பட்டவற்றை உறுதிப்பாட்டுடன் கடைப்பிடிப்பீராக, மேலும் அவர்களுடைய விருப்பங்களைப் பின் பற்றாதீர். மேலும்: “கடவுள்-ஆல் இறக்கி அனுப்பப்பட்ட அனைத்து வேதங்களின் மீதும் நான் நம்பிக்கை கொள்கின்றேன். உங்களுக் கிடையில் நியாயமாகத் தீர்ப்பளிக்க வேண்டு மென நான் கட்டளையிடப்பட்டுள்ளேன். கடவுள் தான் எங்களுடைய இரட்சகரும் மேலும் உங்களுடைய இரட்சகருமாவார். எங்களுடைய செயல்கள் எங்களுக்கு, மேலும் உங்களுடைய செயல்கள் உங்களுக்கு. எங்களுக்கும் உங்களுக்கும் இடையில் எந்தத் தர்க்கமும் இல்லை. கடவுள் நம் அனை வரையும் சேர்த்து ஒன்றாகத் திரட்டுவார்; இறுதி விதி அவரிடமே உள்ளது” என்று பிரகடனம் செய்வீராக.

[42:17] கடவுள்-தான் சத்தியத்தையும் மற்றும் சட்டத்தையும் அறிவிப்பதற்கு, வேதத்தை இறக்கி அனுப்பியவர். நீங்கள் அறிந்துள்ள வாறு, அந்த நேரம் (தீர்ப்புநாள்) மிக அருகில் இருக்கக்கூடும்.