குர்ஆன் 42:17 — கலந்தாலோசித்தல்
கடவுள்-தான் சத்தியத்தையும் மற்றும் சட்டத்தையும் அறிவிப்பதற்கு, வேதத்தை இறக்கி அனுப்பியவர். நீங்கள் அறிந்துள்ள வாறு, அந்த நேரம் (தீர்ப்புநாள்) மிக அருகில் இருக்கக்கூடும்.
[42:16] எவர்கள் அவருடைய தூதுச் செய்தியைப் பெற்ற பின்னர், கடவுள்-ஐப் பற்றித் தர்க்கிக் கின்றனரோ, அவர்களுடைய தர்க்கம் அவர் களுடைய இரட்சகரிடத்தில் செல்லாததாக ஆக்கப்பட்டு விட்டது. அவர்கள் தண்டித் தலுக்கு உள்ளாகிவிட்டனர், மேலும் கடுமை யானதொரு தண்டனைக்குத் தகுதியாகி விட்டனர்.
[42:18] அதன்மீது நம்பிக்கை கொள்ளாதவர்கள் தான் அதற்கு சவால் விடுகின்றனர். நம்பிக்கை கொண்டோரைப் பொறுத்தவரை, அவர்கள் அதனைக் குறித்துக் கவலையுற்றவர்களாக இருக்கின்றனர், மேலும் அது சத்தியம்தான் என்பதை அவர்கள் அறிவார்கள். நிச்சயமாக, அந்த நேரத்தை மறுப்பவர்கள் வழிகேட்டில் வெகு தூரம் சென்று விட்டனர்.