குர்ஆன் 42:18 — கலந்தாலோசித்தல்
அதன்மீது நம்பிக்கை கொள்ளாதவர்கள் தான் அதற்கு சவால் விடுகின்றனர். நம்பிக்கை கொண்டோரைப் பொறுத்தவரை, அவர்கள் அதனைக் குறித்துக் கவலையுற்றவர்களாக இருக்கின்றனர், மேலும் அது சத்தியம்தான் என்பதை அவர்கள் அறிவார்கள். நிச்சயமாக, அந்த நேரத்தை மறுப்பவர்கள் வழிகேட்டில் வெகு தூரம் சென்று விட்டனர்.
[42:17] கடவுள்-தான் சத்தியத்தையும் மற்றும் சட்டத்தையும் அறிவிப்பதற்கு, வேதத்தை இறக்கி அனுப்பியவர். நீங்கள் அறிந்துள்ள வாறு, அந்த நேரம் (தீர்ப்புநாள்) மிக அருகில் இருக்கக்கூடும்.
[42:19] கடவுள் தன்னுடைய அனைத்துப் படைப்பு களையும் முற்றிலும் அறிந்திருக் கின்றார்; தான் நாடுகின்ற எவருக்கும் அவர் வழங்குகின்றார். அவர்தான் சக்தி மிக்கவர், சர்வ வல்லமையுடையவர்.