குர்ஆன் 42:19 — கலந்தாலோசித்தல்
கடவுள் தன்னுடைய அனைத்துப் படைப்பு களையும் முற்றிலும் அறிந்திருக் கின்றார்; தான் நாடுகின்ற எவருக்கும் அவர் வழங்குகின்றார். அவர்தான் சக்தி மிக்கவர், சர்வ வல்லமையுடையவர்.
[42:18] அதன்மீது நம்பிக்கை கொள்ளாதவர்கள் தான் அதற்கு சவால் விடுகின்றனர். நம்பிக்கை கொண்டோரைப் பொறுத்தவரை, அவர்கள் அதனைக் குறித்துக் கவலையுற்றவர்களாக இருக்கின்றனர், மேலும் அது சத்தியம்தான் என்பதை அவர்கள் அறிவார்கள். நிச்சயமாக, அந்த நேரத்தை மறுப்பவர்கள் வழிகேட்டில் வெகு தூரம் சென்று விட்டனர்.
[42:20] எவர் மறுவுலகின் வெகுமதிகளைத் தேடுகின்றாரோ, அவருடைய வெகுமதிகளை நாம் பெருகும்படிச் செய்வோம். மேலும் எவர் இவ்வுலகப் பொருட்களைத் தேடுகின்றாரோ, அவருக்கு அதிலிருந்து நாம் வழங்குவோம், பின்னர் மறுவுலகில் அவர் எந்தப் பங்கையும் பெற்றுக் கொள்ள மாட்டார்.