குர்ஆன் 42:20 — கலந்தாலோசித்தல்
எவர் மறுவுலகின் வெகுமதிகளைத் தேடுகின்றாரோ, அவருடைய வெகுமதிகளை நாம் பெருகும்படிச் செய்வோம். மேலும் எவர் இவ்வுலகப் பொருட்களைத் தேடுகின்றாரோ, அவருக்கு அதிலிருந்து நாம் வழங்குவோம், பின்னர் மறுவுலகில் அவர் எந்தப் பங்கையும் பெற்றுக் கொள்ள மாட்டார்.
[42:19] கடவுள் தன்னுடைய அனைத்துப் படைப்பு களையும் முற்றிலும் அறிந்திருக் கின்றார்; தான் நாடுகின்ற எவருக்கும் அவர் வழங்குகின்றார். அவர்தான் சக்தி மிக்கவர், சர்வ வல்லமையுடையவர்.
[42:21] கடவுள்-ஆல் ஒருபோதும் அங்கீகரிக்கப் படாத மார்க்கச் சட்டங்களை அவர்களுக்கு விதிக்கின்ற இணைத்தெய்வங்களை அவர்கள் பின்பற்றுகின்றனர். முன்னரே நிர்ணயிக்கப்பட்ட தீர்மானம் இல்லாதிருந்தால், அவர்கள் உடனடியாகத் தீர்ப்பளிக்கப் பட்டிருப்பார்கள். உண்மையில், வரம்பு மீறுபவர்கள் வலி நிறைந்ததொரு தண்டனைக்கு உள்ளாகி விட்டனர்*.