Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 42:21 — கலந்தாலோசித்தல்

கடவுள்-ஆல் ஒருபோதும் அங்கீகரிக்கப் படாத மார்க்கச் சட்டங்களை அவர்களுக்கு விதிக்கின்ற இணைத்தெய்வங்களை அவர்கள் பின்பற்றுகின்றனர். முன்னரே நிர்ணயிக்கப்பட்ட தீர்மானம் இல்லாதிருந்தால், அவர்கள் உடனடியாகத் தீர்ப்பளிக்கப் பட்டிருப்பார்கள். உண்மையில், வரம்பு மீறுபவர்கள் வலி நிறைந்ததொரு தண்டனைக்கு உள்ளாகி விட்டனர்*.

[42:20] எவர் மறுவுலகின் வெகுமதிகளைத் தேடுகின்றாரோ, அவருடைய வெகுமதிகளை நாம் பெருகும்படிச் செய்வோம். மேலும் எவர் இவ்வுலகப் பொருட்களைத் தேடுகின்றாரோ, அவருக்கு அதிலிருந்து நாம் வழங்குவோம், பின்னர் மறுவுலகில் அவர் எந்தப் பங்கையும் பெற்றுக் கொள்ள மாட்டார்.

[42:22] அவர்கள் செய்த ஒவ்வொன்றைப் பற்றியும் கவலையுற்றவர்களாக வரம்பு மீறுபவர்களை நீர் காண்பீர்; ஒவ்வொன்றும் திரும்பி வந்து அவர்களை மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யும். நம்பிக்கை கொண்டு மேலும் நன்னெறியானதொரு வாழ்வு நடத்தியவர் களைப் பொறுத்தவரை, அவர்கள் சுவனத்தின் தோட்டங்களில் இருப்பார்கள். அவர்கள் விரும்புகின்ற எதனையும் அவர்களுடைய இரட்சகரிடமிருந்து அவர்கள் பெறுவார்கள். இதுவே மகத்தான அருட்கொடையாகும்.