Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 42:43 — கலந்தாலோசித்தல்

பொறுமையையும் மற்றும் மன்னிப்பையும் மேற் கொள்வது, குணத்தின் மெய்யான பலத்தைப் பிரதிபலிக்கின்றது.

[42:42] மக்களை அநீதமாக நடத்துவதுடன், மேலும் கோபமூட்டும் விஷயம் எதுவுமின்றி சண்டை யிடுவதை வழக்கமாகக் கொண்டிருப்பவர்கள் தான் அநியாயக்காரர்கள் ஆவார்கள். இவர்கள் வலிநிறைந்ததொரு தண்டனைக்கு உள்ளாகி விட்டனர்.

[42:44] கடவுள் வழிகேட்டில் அனுப்பிய எவரும் வேறு எந்த எஜமானரையும் காணமாட்டார், மேலும் தண்டனையை அவர்கள் காணும் பொழுது, இத்தகைய வரம்பு மீறுபவர்கள், “எங்களுக்கு மற்றொரு வாய்ப்பு கிடைக்குமா?” என்று கூறுவதை நீர் காண்பீர்.