குர்ஆன் 42:44 — கலந்தாலோசித்தல்
وَمَن يُضلِلِ اللَّهُ فَما لَهُ مِن وَلِىٍّ مِن بَعدِهِ ۗ وَتَرَى الظّٰلِمينَ لَمّا رَأَوُا العَذابَ يَقولونَ هَل إِلىٰ مَرَدٍّ مِن سَبيلٍ
கடவுள் வழிகேட்டில் அனுப்பிய எவரும் வேறு எந்த எஜமானரையும் காணமாட்டார், மேலும் தண்டனையை அவர்கள் காணும் பொழுது, இத்தகைய வரம்பு மீறுபவர்கள், “எங்களுக்கு மற்றொரு வாய்ப்பு கிடைக்குமா?” என்று கூறுவதை நீர் காண்பீர்.
[42:43] பொறுமையையும் மற்றும் மன்னிப்பையும் மேற் கொள்வது, குணத்தின் மெய்யான பலத்தைப் பிரதிபலிக்கின்றது.
[42:45] பார்த்துக் கொண்டும், ஆயினும் பார்ப்பதைத் தவிர்க்க முயற்சித்துக் கொண்டும், அவமானப் பட்டவர்களாகவும் இழிவடைந்தவர்களாகவும், அவர்கள் அதனை எதிர்கொள்வதை நீர் காண்பீர். நம்பிக்கை கொண்டவர்கள்: “ மீண்டும் உயிர்ப்பித் தெழுப்பப்படும் நாளன்று தங்களுடைய மேலும் தங்கள் குடும்பத்தாருடைய ஆன்மாக்களை நஷ்டப்படுத்திக் கொண்டவர்கள்தான் மெய் யான நஷ்டவாளிகள் ஆவார்கள். வரம்பு மீறியவர்கள் நீடித்திருக்கும் ஒரு தண்டனை க்குத் தகுதியாகி விட்டனர்” என்று பிரகடனம் செய்வார்கள்.