Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 42:45 — கலந்தாலோசித்தல்

பார்த்துக் கொண்டும், ஆயினும் பார்ப்பதைத் தவிர்க்க முயற்சித்துக் கொண்டும், அவமானப் பட்டவர்களாகவும் இழிவடைந்தவர்களாகவும், அவர்கள் அதனை எதிர்கொள்வதை நீர் காண்பீர். நம்பிக்கை கொண்டவர்கள்: “ மீண்டும் உயிர்ப்பித் தெழுப்பப்படும் நாளன்று தங்களுடைய மேலும் தங்கள் குடும்பத்தாருடைய ஆன்மாக்களை நஷ்டப்படுத்திக் கொண்டவர்கள்தான் மெய் யான நஷ்டவாளிகள் ஆவார்கள். வரம்பு மீறியவர்கள் நீடித்திருக்கும் ஒரு தண்டனை க்குத் தகுதியாகி விட்டனர்” என்று பிரகடனம் செய்வார்கள்.

[42:44] கடவுள் வழிகேட்டில் அனுப்பிய எவரும் வேறு எந்த எஜமானரையும் காணமாட்டார், மேலும் தண்டனையை அவர்கள் காணும் பொழுது, இத்தகைய வரம்பு மீறுபவர்கள், “எங்களுக்கு மற்றொரு வாய்ப்பு கிடைக்குமா?” என்று கூறுவதை நீர் காண்பீர்.

[42:46] கடவுள்-க்கெதிராக அவர்களுக்கு உதவி செய்ய நண்பர்கள் எவரும் அங்கே இருக்க மாட்டார்கள். கடவுள் வழிகேட்டில் அனுப்பி விட்ட எவரையும் ஒருபோதும் வழிநடத்தப்பட்டவராக்க முடியாது.