குர்ஆன் 42:46 — கலந்தாலோசித்தல்
கடவுள்-க்கெதிராக அவர்களுக்கு உதவி செய்ய நண்பர்கள் எவரும் அங்கே இருக்க மாட்டார்கள். கடவுள் வழிகேட்டில் அனுப்பி விட்ட எவரையும் ஒருபோதும் வழிநடத்தப்பட்டவராக்க முடியாது.
[42:45] பார்த்துக் கொண்டும், ஆயினும் பார்ப்பதைத் தவிர்க்க முயற்சித்துக் கொண்டும், அவமானப் பட்டவர்களாகவும் இழிவடைந்தவர்களாகவும், அவர்கள் அதனை எதிர்கொள்வதை நீர் காண்பீர். நம்பிக்கை கொண்டவர்கள்: “ மீண்டும் உயிர்ப்பித் தெழுப்பப்படும் நாளன்று தங்களுடைய மேலும் தங்கள் குடும்பத்தாருடைய ஆன்மாக்களை நஷ்டப்படுத்திக் கொண்டவர்கள்தான் மெய் யான நஷ்டவாளிகள் ஆவார்கள். வரம்பு மீறியவர்கள் நீடித்திருக்கும் ஒரு தண்டனை க்குத் தகுதியாகி விட்டனர்” என்று பிரகடனம் செய்வார்கள்.
[42:47] தவிர்த்து விட முடியாததெனக் கடவுள்-ஆல் விதிக்கப்பட்ட ஒரு நாள் வருவதற்கு முன் நீங்கள் உங்கள் இரட்சகருக்கு மறுமொழியளிக்க வேண்டும். அந்நாளில் உங்களுக்கு எந்தப் புகலிடமும் அங்கே இருக்காது, அன்றி ஒரு வாதாடுபவரும் இருக்க மாட்டார்.