Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 42:49 — கலந்தாலோசித்தல்

வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சியதிகாரம் கடவுள்-க்குரியது. தான் நாடுகின்ற எதனையும் அவர் படைக்கின்றார், தான் நாடுகின்ற எவருக்கும் மகள்களை வழங்குகின்றார், மேலும் தான் நாடுகின்ற எவருக்கும் மகன்களை வழங்குகின்றார்.

[42:48] அவர்கள் திரும்பிச் சென்று விட்டால், அவர்களுடைய பாதுகாவலராக உம்மை நாம் அனுப்பவில்லை. உம்முடைய ஒரே இறைப்பணி தூதுச்செய்தியை ஒப்படைப்பதேயாகும். மனிதர் களின் மீது நாம் கருணையைக் கொண்டு பொழியும் போது, அவர்கள் பெருமை கொள் கின்றனர், ஆனால் அவர்களுடைய சொந்தச் செயல்களின் பின் விளைவாக, துன்பம் அவர்களை வருத்தும் பொழுது, மனிதர்கள் நம்ப மறுப்பவர்களாக மாறி விடுகின்றனர்.

[42:50] அல்லது, அவர் ஆண்களையும் பெண்களையும் திருமணம் புரியச் செய்து, பின்னர் தான் நாடுகின்ற எவரையும் மலடாக ஆக்கி விடுகின்றார். அவர் எல்லாம் அறிந்தவர், சர்வ சக்தியுடையவர்.