குர்ஆன் 42:48 — கலந்தாலோசித்தல்
அவர்கள் திரும்பிச் சென்று விட்டால், அவர்களுடைய பாதுகாவலராக உம்மை நாம் அனுப்பவில்லை. உம்முடைய ஒரே இறைப்பணி தூதுச்செய்தியை ஒப்படைப்பதேயாகும். மனிதர் களின் மீது நாம் கருணையைக் கொண்டு பொழியும் போது, அவர்கள் பெருமை கொள் கின்றனர், ஆனால் அவர்களுடைய சொந்தச் செயல்களின் பின் விளைவாக, துன்பம் அவர்களை வருத்தும் பொழுது, மனிதர்கள் நம்ப மறுப்பவர்களாக மாறி விடுகின்றனர்.
[42:47] தவிர்த்து விட முடியாததெனக் கடவுள்-ஆல் விதிக்கப்பட்ட ஒரு நாள் வருவதற்கு முன் நீங்கள் உங்கள் இரட்சகருக்கு மறுமொழியளிக்க வேண்டும். அந்நாளில் உங்களுக்கு எந்தப் புகலிடமும் அங்கே இருக்காது, அன்றி ஒரு வாதாடுபவரும் இருக்க மாட்டார்.
[42:49] வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சியதிகாரம் கடவுள்-க்குரியது. தான் நாடுகின்ற எதனையும் அவர் படைக்கின்றார், தான் நாடுகின்ற எவருக்கும் மகள்களை வழங்குகின்றார், மேலும் தான் நாடுகின்ற எவருக்கும் மகன்களை வழங்குகின்றார்.