குர்ஆன் 42:53 — கலந்தாலோசித்தல்
அப்பாதையானது, வானங்களில் உள்ள ஒவ்வொன்றும் மேலும் பூமியின் மீதுள்ள ஒவ்வொன்றும் எவருக்குரியதோ, அந்தக் கடவுள்-உடையது. நிச்சயமாக, அனைத்து விஷயங்களும் கடவுள்-ஆல் கட்டுப்படுத்தப் படுகின்றன.
[42:52] இவ்விதமாக, நம்முடைய கட்டளைகளைப் பிரகடனம் செய்கின்ற ஒரு வெளிப்பாட்டினை உமக்கு நாம் உள்ளுணர்வின் மூலம் அளித் தோம். வேதம் அல்லது நம்பிக்கை பற்றி, நீர் எதுவும் அறியாதவராக இருந்தீர். இருப்பினும், நம் அடியார்களிலிருந்து நாம் தேர்ந்தெடுக்கின்ற எவரையும் வழிநடத்துவதற்காக இதனை ஒரு வழிகாட்டியாக நாம் ஆக்கினோம். நிச்சயமாக, நேரானதொரு பாதையிலேயே நீர் வழிநடத்துகின்றீர்.