குர்ஆன் 43:23 — ஆபரணங்கள்
எந்தச் சமூகத்திற்கும் ஓர் எச்சரிப்பவரை நாம் அனுப்பிய போதெல்லாம், சிறிதும் மாற்றமின்றி, அந்தச் சமூகத்தின் தலைவர்கள், “குறிப்பிட்ட அனுஷ்டானங்களை எங்கள் பெற்றோர்கள் பின்பற்றி வர நாங்கள் கண்டோம், மேலும் அவர் களுடைய அடிச்சுவடுகளிலேயே நாங்கள் தொடர்ந்து செல்கின்றோம்” என்று கூறுவார்கள்.
[43:22] உண்மையாவது: அவர்கள், “குறிப்பிட்ட அனுஷ்டானங்களை எங்களுடைய பெற்றோர் கள் தொடர்ந்து செய்து வர நாங்கள் கண்டோம், மேலும் அவர்களுடைய அடிச்சுவடுகளையே நாங்கள் பின்பற்றுகின்றோம்” என்று கூறினார்கள்.
[43:24] (அத்தூதர்), “உங்களுடைய பெற்றோர்களிட மிருந்து நீங்கள் பாரம்பர்யமாகப் பெற்றதை விடவும் மேலான வழிகாட்டலை நான் உங்களிடம் கொண்டு வந்தாலுமா?” என்று கூறுவார். அவர்கள், “நீர் கொண்டு வந்த தூதுச்செய்தியின் மீது நம்பிக்கை கொள்ள மறுப்பவர்களாக நாங்கள் இருக்கின்றோம்” என்று கூறுவார்கள்.