குர்ஆன் 43:22 — ஆபரணங்கள்
உண்மையாவது: அவர்கள், “குறிப்பிட்ட அனுஷ்டானங்களை எங்களுடைய பெற்றோர் கள் தொடர்ந்து செய்து வர நாங்கள் கண்டோம், மேலும் அவர்களுடைய அடிச்சுவடுகளையே நாங்கள் பின்பற்றுகின்றோம்” என்று கூறினார்கள்.
[43:21] இதற்கு முன் ஒரு புத்தகத்தை நாம் அவர் களுக்குத் தந்து, மேலும் அதனை அவர்கள் ஆதரிக்கின்றனரா?
[43:23] எந்தச் சமூகத்திற்கும் ஓர் எச்சரிப்பவரை நாம் அனுப்பிய போதெல்லாம், சிறிதும் மாற்றமின்றி, அந்தச் சமூகத்தின் தலைவர்கள், “குறிப்பிட்ட அனுஷ்டானங்களை எங்கள் பெற்றோர்கள் பின்பற்றி வர நாங்கள் கண்டோம், மேலும் அவர் களுடைய அடிச்சுவடுகளிலேயே நாங்கள் தொடர்ந்து செல்கின்றோம்” என்று கூறுவார்கள்.