குர்ஆன் 44:57 — புகை
உம் இரட்சகரிடமிருந்துள்ள அருட்கொடை இத்தகையதே. மகத்தான மாபெரும் வெற்றி இத்தகையதே.
[44:56] அதிலே அவர்கள் மரணத்தைச் சுவைப்பதில்லை-முதல் மரணத்திற்கு* அப்பால்-மேலும் அவர் நரகத்தின் தண்டனையிலிருந்து அவர்களைக் காப்பாற்றி விட்டார்.
[44:58] அவர்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளும் பொருட்டு, இவ்விதமாக நாம் இதனை உம்முடைய மொழியில் தெளிவுபடுத்தியுள்ளோம்.