குர்ஆன் 45:5 — மண்டியிடுதல்
அத்துடன், இரவும் பகலும் மாறி மாறி வருவதிலும், மேலும் இறந்த நிலங்களை மீண்டும் உயிர்ப்பிப் பதற்காக விண்ணிலிருந்து கடவுள் இறக்கி அனுப்புகின்ற வாழ்வாதாரங்களிலும், மேலும் காற்றுகளைத் திறம்படக் கையாளுவதிலும்; புரிந்து கொள்கின்ற மக்களுக்கு இவை அனைத்தும் சான்றுகளாகும்.
[45:4] அத்துடன் உங்களுடைய படைப்பிலும், மேலும் அனைத்து விலங்குகளின் படைப்பிலும், உறுதி யுடைய மக்களுக்குச் சான்றுகள் உள்ளன.
[45:6] இவை, நாம் உமக்கு எடுத்துரைக்கின்ற சத்தியம் நிறைந்த கடவுள்-ன் வெளிப்பாடுகளாகும். கடவுள்-க்கும் அவருடைய வெளிப்பாடுகளுக்கும் பின்னர் வேறு எந்த ஹதீஸில் அவர்கள் நம்பிக்கை கொள்கின்றனர்?