Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 46:20 — மணற்குன்றுகள்

நம்ப மறுப்பவர்களை நரக நெருப்பிற்கு அறிமுகப்படுத்துகின்ற அந்நாள் வரும்; “உங்களுடைய உலக வாழ்வின் போது, உங்களுக்குக் கொடுக்கப்பட்ட நல்ல வாய்ப்பு களை நீங்கள் வீணடித்து விட்டீர்கள், மேலும் அவற்றில் நீங்கள் மகிழ்ச்சியில் இருந்தீர்கள். அதன் விளைவாக, பூமியில் எந்த அடிப்படையுமின்றி நீங்கள் ஆணவம் புரிந்தமைக்கு ஒரு கைம்மாறாகவும், மேலும் உங்களுடைய கெட்ட காரியங்களுக்காகவும் இன்றைய தினம் இழிவு நிறைந்ததொரு தண்டனைக்கு நீங்கள் உள்ளாகி விட்டீர்கள்.”

[46:19] அவர்கள் அனைவரும் அவர்களுடைய காரியங்களுக்கு ஏற்ப, அவர்களுக்குத் தகுந்த அந்தஸ்துகளை அடைவார்கள். சிறிதளவும் அநீதமின்றி, அவர்களுடைய காரியங்களுக்குரிய கூலியை, அவர்களுக்கு அவர் கொடுப்பார்.

[46:21] ஆதுகளின் சகோதரர் மணற்குன்றுகளில் தன் சமூகத்தாரை எச்சரித்ததை நினைவு கூர்வீராக - அவருக்கு முன்னரும் மற்றும் அவருக்குப் பின்னரும் எண்ணற்ற எச்சரிக்கைகள் வழங்கப் பட்டன: “கடவுள்-ஐத் தவிர நீங்கள் வழிபட வேண்டாம். மகத்தானதொரு நாளின் தண்டனையை உங்களுக்கு நான் அஞ்சுகின்றேன்”.