Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 46:19 — மணற்குன்றுகள்

அவர்கள் அனைவரும் அவர்களுடைய காரியங்களுக்கு ஏற்ப, அவர்களுக்குத் தகுந்த அந்தஸ்துகளை அடைவார்கள். சிறிதளவும் அநீதமின்றி, அவர்களுடைய காரியங்களுக்குரிய கூலியை, அவர்களுக்கு அவர் கொடுப்பார்.

[46:18] ஜின்கள் மற்றும் மனிதர்களின் ஒவ்வொரு தலை முறைகளிலும் நம்ப மறுப்பவர்களென முத்திரை யிடப்பட்டவர்கள் இத்தகையவர்கள் தான்; அவர்கள் நஷ்டவாளிகள் ஆவார்கள்.

[46:20] நம்ப மறுப்பவர்களை நரக நெருப்பிற்கு அறிமுகப்படுத்துகின்ற அந்நாள் வரும்; “உங்களுடைய உலக வாழ்வின் போது, உங்களுக்குக் கொடுக்கப்பட்ட நல்ல வாய்ப்பு களை நீங்கள் வீணடித்து விட்டீர்கள், மேலும் அவற்றில் நீங்கள் மகிழ்ச்சியில் இருந்தீர்கள். அதன் விளைவாக, பூமியில் எந்த அடிப்படையுமின்றி நீங்கள் ஆணவம் புரிந்தமைக்கு ஒரு கைம்மாறாகவும், மேலும் உங்களுடைய கெட்ட காரியங்களுக்காகவும் இன்றைய தினம் இழிவு நிறைந்ததொரு தண்டனைக்கு நீங்கள் உள்ளாகி விட்டீர்கள்.”