குர்ஆன் 49:16 — சுவர்கள்
“உங்களுடைய மார்க்கத்தைப் பற்றி கடவுள்-க்கே நீங்கள் தெரியப்படுத்துகின்றீர்களா? வானங்கள் மற்றும் பூமியில் உள்ள ஒவ் வொன்றும் கடவுள்-க்குத் தெரியும். கடவுள் எல்லாம் அறிந்தவர்” என்று கூறுவீராக.
[49:15] முஃமின்கள் (நம்பிக்கையாளர்கள்) எவர்கள் என்றால் கடவுள் மற்றும் அவருடைய தூதர் மீது நம்பிக்கை கொண்டு, பின்னர் எத்தகைய சந்தேகமுமற்ற நிலைப்பாட்டை அடைந்து, மேலும் தங்களுடைய பணத்தையும் மேலும் தங்களுடைய வாழ்வுகளையும் கொண்டு கடவுள்-ன் நிமித்தம் பாடுபடுபவர்களேயாவர். இவர்கள்தான் உண்மையாளர்கள் ஆவர்.
[49:17] அடிபணிதலைத் தழுவுவதன் மூலம் உமக்கு ஏதோ சலுகை புரிந்து விடுவதைப் போல் அவர்கள் நடந்து கொள்கின்றனர்! “அடிபணித லைத் தழுவுவதன் மூலம் நீங்கள் எனக்கு எந்த சலுகைகளும் புரிந்து விடவில்லை. நீங்கள் நேர்மையானவர்களாக இருந்தால், விசுவாசத் தின் பால் உங்களை வழிநடத்தியதன் மூலம் கடவுள் தான் உங்களுக்கு மகத்தானதொரு சலுகை புரிந்துள்ளார்” என்று கூறுவீராக.