Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 49:7 — சுவர்கள்

وَاعلَموا أَنَّ فيكُم رَسولَ اللَّهِ ۚ لَو يُطيعُكُم فى كَثيرٍ مِنَ الأَمرِ لَعَنِتُّم وَلٰكِنَّ اللَّهَ حَبَّبَ إِلَيكُمُ الإيمٰنَ وَزَيَّنَهُ فى قُلوبِكُم وَكَرَّهَ إِلَيكُمُ الكُفرَ وَالفُسوقَ وَالعِصيانَ ۚ أُولٰئِكَ هُمُ الرّٰشِدونَ

மேலும் கடவுள்-ன் தூதர் உங்கள் மத்தியில் வந்திருக்கின்றார் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். பல விஷயங்களில் அவர் உங்களுடைய பேச்சைக் கேட்டிருந்தால், காரியங் களை நீங்கள் உங்களுக்கே கடினமானதாக ஆக்கிக் கொண்டிருந்திருப்பீர்கள். ஆனால் கடவுள் உங்களை விசுவாசத்தை நேசிக்கும்படிச் செய்தார், மேலும் உங்கள் இதயங்களில் அதை அழகானதாக இருக்கும்படியும் மேலும் அவர் உங்களை நம்ப மறுத்தல், தீய நடத்தை மற்றும் கீழ்ப்படியாமை ஆகியவற்றை வெறுக்கும்படியும் செய்தார். இவர்கள்தான் வழிநடத்தப்பட்டவர்களாக இருக்கின்றனர்.

[49:6] நம்பிக்கை கொண்டோரே, தீய மனிதன் ஒருவன் உங்களிடம் ஏதேனும் செய்தியைக் கொண்டு வந்தால், அறியாமையினால், சில மனிதர்களுக்கெதிராக நீங்கள் அநியாயம் புரிந்து விட்டு, பின்னர் நீங்கள் செய்தவற்றிற்காக வருத்தமும் மேலும் கவலையும் அடையாதிருக்கும் பொருட்டு, முதலில் நீங்கள் விசாரித்துக் கொள்ள வேண்டும்.

[49:8] கடவுள்-உடைய அருளும் மேலும் அவருடைய அருட்கொடைகளும் இத்தகையதேயாகும். கடவுள் எல்லாம் அறிந்தவர், ஞானம் மிக்கவர்.