Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 5:111 — விருந்து

“நான் சீடர்களுக்கு, ‘நீங்கள் என்மீதும் என்னுடைய தூதர்மீதும் நம்பிக்கை கொள்ள வேண்டும்’ என்று உள்ளுணர்வு அளித்ததை நினைவு கூர்வீராக. அவர்கள் ‘நாங்கள் நம்பிக்கை கொண்டோம் மேலும் நாங்கள் அடிபணிந்தவர்கள் என்று சாட்சி கூறுகின் றோம்’ என்று கூறினார்கள்.”

[5:110] கடவுள் கூறுவார், “மேரியின் மகனாகிய இயேசுவே, உம்மீதும் உம்முடைய தாயார் மீதும் என்னுடைய அருட்கொடைகளை நினைவு கூர்வீராக. நீர் தொட்டிலில் இருந்த போதும் மேலும் வாலிபரான போதும் மக்களிடம் பேசுவதற்கான ஆற்றலைத் தர பரிசுத்த ஆவியைக் கொண்டு நான் உதவி செய்தேன். நான் உமக்கு வேதத்தையும், ஞானத்தையும், தோராவையும், சுவிசேஷத்தையும் கற்றுக் கொடுத்தேன். நீர் என்னுடைய அனுமதியின்படி களிமண்ணிலிருந்து ஒரு பறவை உருவத்தை உருவாக்கினீர், பின்னர் அதனுள் ஊதினீர், அப்போது அது என்னுடைய அனுமதியின்படி ஓர் உயிருள்ள பறவையாக மாறியதை நினைவு கூர்வீராக. நீர் என்னுடைய அனுமதியின்படி குருடரையும், குஷ்டரோகியையும் குணப் படுத்தினீர், மேலும் என்னுடைய அனுமதியின் படி இறந்தவரை உயிர்ப்பித்தீர். ஆழ்ந்த அற்புதங்களை நீர் அவர்களுக்கு காட்டிய போதும் உமக்கு தீங்கு செய்ய விரும்பிய இஸ்ரவேலின் சந்ததியரிடம் இருந்து உம்மை நான் பாதுகாத்ததை”, நினைவு கூர்வீராக. அவர்களுக்கிடையே இருந்த நம்பிக்கையற்ற வர்கள். ‘இது தெளிவான மாயாஜாலம்’, என்று கூறினார்கள்.

[5:112] சீடர்கள், “மேரியின் மகன் இயேசுவே, உம்முடைய இரட்சகரால் வானத்திலிருந்து எங்களுக்கு ஒரு விருந்தை அனுப்ப முடியுமா?” என்று கூறியதை நினைவு கூர்வீராக. அவர், “நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால், கடவுள்-இடம் பயபக்தியுடன் இருக்க வேண்டும்” என்று கூறினார்.