குர்ஆன் 5:5 — விருந்து
இன்று, நல்ல உணவுகள் அனைத்தும், உங்களு க்குச் சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்டுள்ளன. வேதத்தை உடைய மக்களின் உணவுகளும் உங்களுக்குச் சட்டபூர்வமாக ஆகுமாக்கப் பட்டுள்ளது. இன்னும் அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய வரதட்சணைத் தொகையை அவர்களிடம் கொடுத்துவிடும் பட்சத்தில், நம்பிக்கையாளர்களில் கற்புள்ள பெண்களையும், அதே போல் முந்தைய வேதத்தைப் பின்பற்றுபவர்களில் கற்புள்ள பெண்களையும் நீங்கள் திருமணம் செய்து கொள்ளலாம். விபச்சாரத்திற்குட்படாமலும், இரகசியக் காதலர்களை ஏற்படுத்திக் கொள்ளாமலும், நீங்கள் கற்பைப் பேணிக் கொள்ளுங்கள். எவரொருவர் விசுவாசத்தை நிராகரிக்கின்றாரோஅவருடையஅனைத்துக் காரியங்களும் வீணானதாகிவிடும், மேலும் மறுவுலகில் அவர் நஷ்டம் அடைந்தவர்களுடன் இருப்பார்.
[5:4] அவர்களுக்குச் சட்டபூர்வமாக அனுமதி க்கப்பட்டவை குறித்து உம்மிடம் அவர்கள் ஆலோசிக்கின்றனர்; “பயிற்றுவிக்கப்பட்ட நாய்கள் மற்றும் வல்லூறுகள் உங்களுக்காகப் பிடித்து வருபவை உட்பட, நல்லவை அனைத்தும் உங்களுக்குச் சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்டுள்ளன” என்று கூறுவீராக. கடவுள்-ன் போதனைகளுக்கு இணங்க அவற்றை நீங்கள் பயிற்றுவியுங்கள். அவை உங்களுக்காகப் பிடித்து வருபவற்றை நீங்கள் உண்ணலாம், மேலும் அவற்றின் மீது கடவுள்-ன் பெயரைக் குறிப்பிடுங்கள். நீங்கள் கடவுள்-ஐக் கவனத்தில் கொள்ளுங்கள். கணக்கிடுவதில் கடவுள் மிகத் திறன் வாய்ந்தவர்.
[5:6] நம்பிக்கை கொண்டோரே, நீங்கள் தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) கடைப் பிடிக்கும் போது நீங்கள்: (1) உங்கள் முகங்களை கழுவிக் கொள்ளுங்கள், (2) உங்கள் கைகளை முழங்கை கள் வரை கழுவிக்கொள்ளுங்கள், (3) உங்கள் தலைகளைத் தடவிக் கொள்ளுங்கள் மேலும் (4) உங்களுடைய பாதங்களைக் கணுக்கால்கள் வரை கழுவிக் கொள்ளுங்கள். புணர்ச்சியின் பரவசத் தால் நீங்கள் சுத்தமற்றவர்களாக இருந்தால் நீங்கள் குளிக்க வேண்டும். நீங்கள் நோயுற்றோ அல்லது பயணத்திலோ இருந்தால், அல்லது செரி மானம் சார்ந்த ஏதேனும் கழிவு ஏற்பட்டிருந்தால் (சிறுநீர், மலம் அல்லது வாயு), அல்லது பெண் களுடன் (பாலியல்) உறவு கொண்டுவிட்டால், மேலும் உங்களுக்குத் தண்ணீர் கிடைக்காமல் போனால், சுத்தமான காய்ந்த மணலைத் தொட்டு, பின்னர் உங்களது முகங்களையும், கைகளையும் தடவிக் கொள்வதன் மூலம் உலர்ந்த அங்க சுத்தி (தயம்மும்) செய்து கொள்ளுங்கள். உங்களுக்கு மார்க்கத்தைக் கடினமானதாக்கு வதற்கு கடவுள் விரும்பவில்லை. நீங்கள் நன்றி உடையோராய் இருக்கும் பொருட்டு உங்களை சுத்தப்படுத்துவதற்கும், உங்கள் மீது தன்னுடைய அருட்கொடையை முழுமையாக்குவதற்குமே அவர் விரும்புகின்றார்.