Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 5:4 — விருந்து

அவர்களுக்குச் சட்டபூர்வமாக அனுமதி க்கப்பட்டவை குறித்து உம்மிடம் அவர்கள் ஆலோசிக்கின்றனர்; “பயிற்றுவிக்கப்பட்ட நாய்கள் மற்றும் வல்லூறுகள் உங்களுக்காகப் பிடித்து வருபவை உட்பட, நல்லவை அனைத்தும் உங்களுக்குச் சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்டுள்ளன” என்று கூறுவீராக. கடவுள்-ன் போதனைகளுக்கு இணங்க அவற்றை நீங்கள் பயிற்றுவியுங்கள். அவை உங்களுக்காகப் பிடித்து வருபவற்றை நீங்கள் உண்ணலாம், மேலும் அவற்றின் மீது கடவுள்-ன் பெயரைக் குறிப்பிடுங்கள். நீங்கள் கடவுள்-ஐக் கவனத்தில் கொள்ளுங்கள். கணக்கிடுவதில் கடவுள் மிகத் திறன் வாய்ந்தவர்.

[5:3] தானாக இறந்து போன பிராணிகள், இரத்தம், பன்றிகளின் இறைச்சி*, மேலும் கடவுள் அல்லாத மற்றவைக்குப் படைக்கப்பட்ட பிராணிகள் ஆகியவை உங்களுக்கு தடுக்கப் பட்டுள்ளன. குரல்வளை நெறித்து ஒரு பொருளால் தாக்கப்பட்டு, உயரத்திலிருந்து விழுந்து, குத்திக் கிழிக்கப்பட்டு, வன விலங்கி னால் தாக்கப்பட்டு இறந்தவைகள் - அவை இறப்பதற்கு முன்பு நீங்கள் உங்கள் பிராணி யைக் காப்பாற்றினாலன்றி-மேலும் பலி பீடங் களில் பலியிடப்பட்ட பிராணிகள் ஆகியவை (தானாக இறந்து போன பிராணிகளில் உட்பட்டவை). மேலும் ஒரு அதிர்ஷ்ட விளை யாட்டின் மூலம் இறைச்சியைப் பங்கிடுவதும் தடை செய்யப்பட்டுள்ளது; இது ஒரு மிகவும் அருவருப்பானதாகும். இன்று நம்பமறுப்பவர்கள் உங்களுடைய மார்க்கத்தை (அடியோடு அழிப்பது) குறித்து நம்பிக்கை இழந்து விட்டார்கள், அவர்களுக்கு அஞ்சாதீர்கள், மாறாக எனக்கே அஞ்சுங்கள். இன்று உங்களு டைய மார்க்கத்தை நான் நிறைவு செய்து விட்டேன். உங்கள் மீது என்னுடைய அருட்கொடையை பூரணமாக்கினேன், மேலும் உங்களுக்கான மார்க்கமாக அடிபணிதலை நான் விதித்துள்ளேன். வேண்டுமென்றே பாவகரமாக இல்லாமல், பஞ்சத்தினால் ஒருவன் (தடுக்கப்பட்ட உணவை உண்பதற்கு) நிர்ப் பந்திக்கப்பட்டால், பின்னர் கடவுள் மன்னிப் பவர், கருணையாளர்.

[5:5] இன்று, நல்ல உணவுகள் அனைத்தும், உங்களு க்குச் சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்டுள்ளன. வேதத்தை உடைய மக்களின் உணவுகளும் உங்களுக்குச் சட்டபூர்வமாக ஆகுமாக்கப் பட்டுள்ளது. இன்னும் அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய வரதட்சணைத் தொகையை அவர்களிடம் கொடுத்துவிடும் பட்சத்தில், நம்பிக்கையாளர்களில் கற்புள்ள பெண்களையும், அதே போல் முந்தைய வேதத்தைப் பின்பற்றுபவர்களில் கற்புள்ள பெண்களையும் நீங்கள் திருமணம் செய்து கொள்ளலாம். விபச்சாரத்திற்குட்படாமலும், இரகசியக் காதலர்களை ஏற்படுத்திக் கொள்ளாமலும், நீங்கள் கற்பைப் பேணிக் கொள்ளுங்கள். எவரொருவர் விசுவாசத்தை நிராகரிக்கின்றாரோஅவருடையஅனைத்துக் காரியங்களும் வீணானதாகிவிடும், மேலும் மறுவுலகில் அவர் நஷ்டம் அடைந்தவர்களுடன் இருப்பார்.