குர்ஆன் 5:3 — விருந்து
தானாக இறந்து போன பிராணிகள், இரத்தம், பன்றிகளின் இறைச்சி*, மேலும் கடவுள் அல்லாத மற்றவைக்குப் படைக்கப்பட்ட பிராணிகள் ஆகியவை உங்களுக்கு தடுக்கப் பட்டுள்ளன. குரல்வளை நெறித்து ஒரு பொருளால் தாக்கப்பட்டு, உயரத்திலிருந்து விழுந்து, குத்திக் கிழிக்கப்பட்டு, வன விலங்கி னால் தாக்கப்பட்டு இறந்தவைகள் - அவை இறப்பதற்கு முன்பு நீங்கள் உங்கள் பிராணி யைக் காப்பாற்றினாலன்றி-மேலும் பலி பீடங் களில் பலியிடப்பட்ட பிராணிகள் ஆகியவை (தானாக இறந்து போன பிராணிகளில் உட்பட்டவை). மேலும் ஒரு அதிர்ஷ்ட விளை யாட்டின் மூலம் இறைச்சியைப் பங்கிடுவதும் தடை செய்யப்பட்டுள்ளது; இது ஒரு மிகவும் அருவருப்பானதாகும். இன்று நம்பமறுப்பவர்கள் உங்களுடைய மார்க்கத்தை (அடியோடு அழிப்பது) குறித்து நம்பிக்கை இழந்து விட்டார்கள், அவர்களுக்கு அஞ்சாதீர்கள், மாறாக எனக்கே அஞ்சுங்கள். இன்று உங்களு டைய மார்க்கத்தை நான் நிறைவு செய்து விட்டேன். உங்கள் மீது என்னுடைய அருட்கொடையை பூரணமாக்கினேன், மேலும் உங்களுக்கான மார்க்கமாக அடிபணிதலை நான் விதித்துள்ளேன். வேண்டுமென்றே பாவகரமாக இல்லாமல், பஞ்சத்தினால் ஒருவன் (தடுக்கப்பட்ட உணவை உண்பதற்கு) நிர்ப் பந்திக்கப்பட்டால், பின்னர் கடவுள் மன்னிப் பவர், கருணையாளர்.
[5:2] நம்பிக்கை கொண்டோரே, கடவுள்-ஆல் ஏற்படுத்தப்பட்ட சடங்குகளை மீறாதீர்கள், அன்றி புனித மாதங்களுக்கும், பலியிடப் படவேண்டிய பிராணிகளுக்கும், அவற்றை அடையாளம் காட்டும் மாலைகளுக்கும், தங்களுடைய இரட்சகரிடமிருந்து அருட் கொடைகளையும் மேலும் அங்கீகாரத்தையும் தேடிப் புனிதஸ்தலத்தை (கஃபா) நோக்கிச் செல்பவர்களுக்கும் கெடுதல் செய்யாதீர்கள். நீங்கள் புனித யாத்திரையை நிறைவு செய்து விட்டால் நீங்கள் வேட்டையாடலாம். * புனித மஸ்ஜிதிற்கு நீங்கள் செல்வதை முன்னொரு சமயம் தடுத்த மக்களின் மீதுள்ள பகைமை யினால் சினம் கொண்டவர்களாகி, வலுச் சண்டையில் ஈடுபடாதீர்கள். நன்னெறி மற்றும் பயபக்தியின் விஷயங்களில் நீங்கள் ஒத் துழைத்துக் கொள்ளுங்கள், பாவகரமான மற்றும் தீய விஷயங்களில் ஒத்துழைக்காதீர்கள். நீங்கள் கடவுள்-ஐக் கவனத்தில் கொள்ளுங்கள். கடவுள் தண்டனையை நிறை வேற்றுவதில் கண்டிப்பானவர்.
[5:4] அவர்களுக்குச் சட்டபூர்வமாக அனுமதி க்கப்பட்டவை குறித்து உம்மிடம் அவர்கள் ஆலோசிக்கின்றனர்; “பயிற்றுவிக்கப்பட்ட நாய்கள் மற்றும் வல்லூறுகள் உங்களுக்காகப் பிடித்து வருபவை உட்பட, நல்லவை அனைத்தும் உங்களுக்குச் சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்டுள்ளன” என்று கூறுவீராக. கடவுள்-ன் போதனைகளுக்கு இணங்க அவற்றை நீங்கள் பயிற்றுவியுங்கள். அவை உங்களுக்காகப் பிடித்து வருபவற்றை நீங்கள் உண்ணலாம், மேலும் அவற்றின் மீது கடவுள்-ன் பெயரைக் குறிப்பிடுங்கள். நீங்கள் கடவுள்-ஐக் கவனத்தில் கொள்ளுங்கள். கணக்கிடுவதில் கடவுள் மிகத் திறன் வாய்ந்தவர்.