Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 57:20 — இரும்பு

இவ்வுலக வாழ்க்கையானது விளையாட்டு மற்றும் வேடிக்கை, மேலும் உங்களுக்கிடையில் பெருமையடித்துக் கொள்ளுதல், மேலும் பணத் தையும் பிள்ளைகளையும் பெருக்கிக்கொள்ளுதல் ஆகியவற்றை விட அதிகம் எதுவுமில்லை என்பதை அறிந்து கெள்ளுங்கள். இது தாவரங்களை விளைவித்து நம்பமறுப்பவர்களை மகிழ்விக்கும் தாராளமான மழையைப் போன்றதாகும். ஆனால் பின்னர் அத்தாவரங்கள் பயனற்ற கூளமாகி, மேலும் காற்றால் அடித்துச் செல்லப்பட்டு விடுகின்றன. மறுவுலகில் கடுமையான தண்டனை, அல்லது கடவுள்-இடமிருந்து மன்னிப்பு மற்றும் அங்கீகாரம் ஆகிய இரண்டில் ஒன்றே உள்ளது. இவ்வுலக வாழ்வு தற்காலிகமானதொரு மாயை என்பதை விட அதிகம் எதுவுமில்லை.

[57:19] கடவுள் மற்றும் அவருடைய தூதர் மீது நம்பிக் கை கொண்டவர்கள் புனிதர்களும் உயிர்த்தி யாகிகளும் ஆவார்கள். அவர்களுடைய வெகுமதிகளும் மற்றும் அவர்களுடைய ஒளியும் அவர்களுடைய இரட்சகரிடத்தில் அவர் களுக்காக ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளன. நம்பிக்கை கொள்ள மறுத்து மேலும் நம் வெளிப் பாடுகளை ஏற்றுக் கொள்ள மறுத்தவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் நரகத்திற்கு உள்ளாகி விட்டார்கள்.

[57:21] ஆகையால், நீங்கள் உங்கள் இரட்சகரிட மிருந்து மன்னிப்பையும், மேலும் வானம் மற்றும் பூமியை சூழ்ந்திருக்கும் அளவு அகலத்தைக் கொண்டதோர் சுவனத்தையும் நோக்கி விரைந்து செல்ல வேண்டும். கடவுள் மற்றும் அவருடைய தூதர்கள் மீது நம்பிக்கை கொண்டவர்களுக்காக அது காத்துக் கொண்டிருக்கின்றது. தான் நாடுகின்ற எவருக்கும் கடவுள் அளிக்கின்ற அவருடைய அருளானது இத்தகையதேயாகும். கடவுள் எல்லையற்ற கிருபையை உடையவராக இருக்கின்றார்.