Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 57:21 — இரும்பு

ஆகையால், நீங்கள் உங்கள் இரட்சகரிட மிருந்து மன்னிப்பையும், மேலும் வானம் மற்றும் பூமியை சூழ்ந்திருக்கும் அளவு அகலத்தைக் கொண்டதோர் சுவனத்தையும் நோக்கி விரைந்து செல்ல வேண்டும். கடவுள் மற்றும் அவருடைய தூதர்கள் மீது நம்பிக்கை கொண்டவர்களுக்காக அது காத்துக் கொண்டிருக்கின்றது. தான் நாடுகின்ற எவருக்கும் கடவுள் அளிக்கின்ற அவருடைய அருளானது இத்தகையதேயாகும். கடவுள் எல்லையற்ற கிருபையை உடையவராக இருக்கின்றார்.

[57:20] இவ்வுலக வாழ்க்கையானது விளையாட்டு மற்றும் வேடிக்கை, மேலும் உங்களுக்கிடையில் பெருமையடித்துக் கொள்ளுதல், மேலும் பணத் தையும் பிள்ளைகளையும் பெருக்கிக்கொள்ளுதல் ஆகியவற்றை விட அதிகம் எதுவுமில்லை என்பதை அறிந்து கெள்ளுங்கள். இது தாவரங்களை விளைவித்து நம்பமறுப்பவர்களை மகிழ்விக்கும் தாராளமான மழையைப் போன்றதாகும். ஆனால் பின்னர் அத்தாவரங்கள் பயனற்ற கூளமாகி, மேலும் காற்றால் அடித்துச் செல்லப்பட்டு விடுகின்றன. மறுவுலகில் கடுமையான தண்டனை, அல்லது கடவுள்-இடமிருந்து மன்னிப்பு மற்றும் அங்கீகாரம் ஆகிய இரண்டில் ஒன்றே உள்ளது. இவ்வுலக வாழ்வு தற்காலிகமானதொரு மாயை என்பதை விட அதிகம் எதுவுமில்லை.

[57:22] பூமியின் மீதோ, அல்லது உங்களுக்கோ, நிகழ் கின்ற எந்த ஒன்றும் ஏற்கனவே பதிவு செய்யப் பட்டுள்ளது, இன்னும் படைக்கப்படுவதற்கும் முன்னரே. இதனைச் செய்வது கடவுள் - க்கு எளிதானதேயாகும்.