Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 57:22 — இரும்பு

பூமியின் மீதோ, அல்லது உங்களுக்கோ, நிகழ் கின்ற எந்த ஒன்றும் ஏற்கனவே பதிவு செய்யப் பட்டுள்ளது, இன்னும் படைக்கப்படுவதற்கும் முன்னரே. இதனைச் செய்வது கடவுள் - க்கு எளிதானதேயாகும்.

[57:21] ஆகையால், நீங்கள் உங்கள் இரட்சகரிட மிருந்து மன்னிப்பையும், மேலும் வானம் மற்றும் பூமியை சூழ்ந்திருக்கும் அளவு அகலத்தைக் கொண்டதோர் சுவனத்தையும் நோக்கி விரைந்து செல்ல வேண்டும். கடவுள் மற்றும் அவருடைய தூதர்கள் மீது நம்பிக்கை கொண்டவர்களுக்காக அது காத்துக் கொண்டிருக்கின்றது. தான் நாடுகின்ற எவருக்கும் கடவுள் அளிக்கின்ற அவருடைய அருளானது இத்தகையதேயாகும். கடவுள் எல்லையற்ற கிருபையை உடையவராக இருக்கின்றார்.

[57:23] இதன்படி, நீங்கள் தவற விட்ட எந்த ஒன்றிற் காகவும் நீங்கள் துக்கப்படக் கூடாது, அன்றியும் அவர் உங்களுக்கு அளித்த எந்த ஒன்றிற்காகவும் கர்வம் கொள்ளவும் கூடாது. தற்பெருமை நிறைந்தவர்களை, கர்வம் கொண்டவர்களைக் கடவுள் நேசிப்பதில்லை.