குர்ஆன் 57:4 — இரும்பு
அவர்தான் வானங்கள் மற்றும் பூமியை ஆறு நாட்களில்* படைத்தவர், பின்னர் அனைத்து அதிகாரங்களையும் ஏற்றுக் கொண்டவர். பூமிக்குள் நுழைகின்ற ஒவ்வொன்றையும், மேலும் அதிலிருந்து வெளியில் வரும் ஒவ்வொன்றையும், விண்ணிலிருந்து இறங்கி வரும் ஒவ்வொன்றையும், மேலும் அதில் ஏறுகின்ற ஒவ்வொன்றையும் அவர் அறிவார். நீங்கள் எங்கிருந்த போதிலும் அவர் உங்களுடன் இருக்கின்றார். நீங்கள் செய்கின்ற ஒவ்வொன்றையும் பார்ப்பவராகக் கடவுள் இருக்கின்றார்.
[57:3] அவர்தான் முதன்மையானவர் மேலும் முடிவு மானவர். அவர்தான் மிகவும் வெளியிலிருப் பவர் மேலும் மிகவும் உள்ளிருப்பவர். அவர் அனைத்து விஷயங்களையும் முற்றிலும் அறிந்தவர்.
[57:5] வானங்கள் மற்றும் பூமியின் அரசுரிமை அவருக்கே உரியது. அனைத்து விஷயங்களும் கடவுள் - ஆல் கட்டுப்படுத்தப்படுகின்றன.