Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 58:1 — தர்க்கம்

தன்னுடைய கணவனைப் பற்றி உம்முடன் தர்க் கித்து, மேலும் கடவுள்-இடம் புகார் கொடுத்த அப்பெண்மணியைக் கடவுள் செவியேற்றுக் கொண்டார். நீங்கள் இருவரும் விவாதித்த ஒவ்வொன்றையும் கடவுள் செவியேற்றார். கடவுள் செவியேற்பவர், பார்ப்பவர்.

[58:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்

[58:2] தங்களுடைய தாய்மார்கள் என (தாம்பத்யத்திற்கு தடை செய்யப்பட்டவர்களாக அவர்களை அறிவிப்பதன் மூலம்) தங்களுடைய மனைவியரைப் பிணையறுத்துக் கொள்ளும் உங்களில் உள்ளவர்கள், அவர்கள் தங்களுடைய தாய் மார்கள் அல்ல* என்பதை முற்றிலும் நன்கறிந்தே இருக்கின்றனர். அவர்களைப் பெற்றெடுத்தவர் களே அவர்களுடைய தாய்மார்கள் ஆவார்கள். உண்மையில், அவர்கள் ஓர் அவதூறையும் மேலும் ஒரு வஞ்சகத்தையும் செய்கின்றனர். கடவுள் பிழை பொறுப்பவர், மன்னிப்பவர்.