குர்ஆன் 58:2 — தர்க்கம்
தங்களுடைய தாய்மார்கள் என (தாம்பத்யத்திற்கு தடை செய்யப்பட்டவர்களாக அவர்களை அறிவிப்பதன் மூலம்) தங்களுடைய மனைவியரைப் பிணையறுத்துக் கொள்ளும் உங்களில் உள்ளவர்கள், அவர்கள் தங்களுடைய தாய் மார்கள் அல்ல* என்பதை முற்றிலும் நன்கறிந்தே இருக்கின்றனர். அவர்களைப் பெற்றெடுத்தவர் களே அவர்களுடைய தாய்மார்கள் ஆவார்கள். உண்மையில், அவர்கள் ஓர் அவதூறையும் மேலும் ஒரு வஞ்சகத்தையும் செய்கின்றனர். கடவுள் பிழை பொறுப்பவர், மன்னிப்பவர்.
[58:1] தன்னுடைய கணவனைப் பற்றி உம்முடன் தர்க் கித்து, மேலும் கடவுள்-இடம் புகார் கொடுத்த அப்பெண்மணியைக் கடவுள் செவியேற்றுக் கொண்டார். நீங்கள் இருவரும் விவாதித்த ஒவ்வொன்றையும் கடவுள் செவியேற்றார். கடவுள் செவியேற்பவர், பார்ப்பவர்.
[58:3] இந்த முறையில் தங்களுடைய மனைவியரைப் பிணையறுத்துக் கொண்டு விட்டு, அதற்குப் பின்னர் இணக்கமாகிக் கொள்பவர்கள், தங் களுடைய தாம்பத்யத் தொடர்புகளை மீண்டும் துவங்குவதற்கு முன்னர் ஓர் அடிமையை விடுதலை செய்வது கொண்டு பரிகாரம் செய்ய வேண்டும். இது உங்களுக்கு அறிவூட்டு வதற்காக வேயாகும். நீங்கள் செய்கின்ற ஒவ்வொன்றையும் கடவுள் நன்கறிந்தவராக இருக்கின்றார்.