Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 58:3 — தர்க்கம்

இந்த முறையில் தங்களுடைய மனைவியரைப் பிணையறுத்துக் கொண்டு விட்டு, அதற்குப் பின்னர் இணக்கமாகிக் கொள்பவர்கள், தங் களுடைய தாம்பத்யத் தொடர்புகளை மீண்டும் துவங்குவதற்கு முன்னர் ஓர் அடிமையை விடுதலை செய்வது கொண்டு பரிகாரம் செய்ய வேண்டும். இது உங்களுக்கு அறிவூட்டு வதற்காக வேயாகும். நீங்கள் செய்கின்ற ஒவ்வொன்றையும் கடவுள் நன்கறிந்தவராக இருக்கின்றார்.

[58:2] தங்களுடைய தாய்மார்கள் என (தாம்பத்யத்திற்கு தடை செய்யப்பட்டவர்களாக அவர்களை அறிவிப்பதன் மூலம்) தங்களுடைய மனைவியரைப் பிணையறுத்துக் கொள்ளும் உங்களில் உள்ளவர்கள், அவர்கள் தங்களுடைய தாய் மார்கள் அல்ல* என்பதை முற்றிலும் நன்கறிந்தே இருக்கின்றனர். அவர்களைப் பெற்றெடுத்தவர் களே அவர்களுடைய தாய்மார்கள் ஆவார்கள். உண்மையில், அவர்கள் ஓர் அவதூறையும் மேலும் ஒரு வஞ்சகத்தையும் செய்கின்றனர். கடவுள் பிழை பொறுப்பவர், மன்னிப்பவர்.

[58:4] விடுதலை செய்வதற்கு ஓர் அடிமையை நீங்கள் காண இயலாமற் போனால், தாம்பத்யத் தொடர்பு களை மீண்டும் துவங்குவதற்கு முன்னர் தொடர்ச்சியான இரு மாதங்களுக்கு நீங்கள் நோன்பிருக்க வேண்டும். உங்களால் நோன் பிருக்க இயலாவிட்டால், பின்னர் நீங்கள் அறுபது ஏழை மக்களுக்கு உணவளிக்க வேண்டும். கடவுள் மற்றும் அவருடைய தூதர் மீது நீங்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும். இவை கடவுள்-ன் சட்டங்களாகும். நம்ப மறுப்பவர்கள் வலி நிறைந்ததொரு தண்டனைக்கு உள்ளாகி விட்டனர்.