குர்ஆன் 59:13 — வெளியேற்றம்
உண்மையில், கடவுள் மீது அவர்களுடைய அச்சத்தைக் காட்டிலும், அவர்களுடைய இதயங்களில் அதிகமான அச்சத்தை நீங்கள் ஏற்படுத்துகின்றீர்கள். இது ஏனெனில், அவர்கள் கிரகித்துக்கொள்ளாத மக்களாக இருக்கின்றனர்.
[59:12] மெய்யாகவே, அவர்கள் வெளியேற்றப் பட்டிருந் தால், அவர்களுடன் சேர்ந்து அவர்கள் வெளி யேறிச்சென்று இருக்க மாட்டார்கள், மேலும் எவரேனும் அவர்களுடன் சண்டையிட்டிருந் தால், அவர்களுக்கு அவர்கள் ஆதரவளித் திருக்க மாட்டார்கள். அவர்களுக்கு அவர்கள் ஆதரவளித்திருந்தாலும் அவர்கள் புறங் காட்டித் திரும்பி ஓடியிருப்பார்கள். அவர்கள் ஒருபோதும் வெற்றி பெற்றிருக்க இயலாது.
[59:14] நன்கு பாதுகாக்கப்பட்ட கட்டிடங்களுக்குள் ளோ அல்லது சுவர்களுக்குப் பின்னாலோ அவர் கள் இருந்தாலேயன்றி உங்களுடன் சண்டை யிட அவர்கள் ஒன்று சேர மாட்டார்கள். அவர்களுக்கிடையில், அவர்களுடைய பலம் எதிர்க்க இயலாததைப் போன்று தோன்று கின்றது. அவர்கள் ஒற்றுமையாக இருப்பதாக நீர் நினைக்கக் கூடும், ஆனால் உண்மையில் அவர்களுடைய இதயங்கள் பிரிந்திருக் கின்றன. இது ஏனெனில் அவர்கள் புரிந்து கொள்ளாத மக்களாக இருக்கின்றனர்.