குர்ஆன் 59:12 — வெளியேற்றம்
மெய்யாகவே, அவர்கள் வெளியேற்றப் பட்டிருந் தால், அவர்களுடன் சேர்ந்து அவர்கள் வெளி யேறிச்சென்று இருக்க மாட்டார்கள், மேலும் எவரேனும் அவர்களுடன் சண்டையிட்டிருந் தால், அவர்களுக்கு அவர்கள் ஆதரவளித் திருக்க மாட்டார்கள். அவர்களுக்கு அவர்கள் ஆதரவளித்திருந்தாலும் அவர்கள் புறங் காட்டித் திரும்பி ஓடியிருப்பார்கள். அவர்கள் ஒருபோதும் வெற்றி பெற்றிருக்க இயலாது.
[59:11] நயவஞ்சகத்தால் பீடிக்கப்பட்டவர்களை, மேலும் வேதத்தையுடைய மக்களுக்கிடையில் நம்பமறுத்தலில் உள்ள தங்களுடைய தோழர் களிடம் அவர்கள், “நீங்கள் வெளியேற்றப் பட்டால் நாங்களும் உங்களுடன் சேர்ந்து வெளியில் வந்து விடுவோம், மேலும் உங்களை எதிர்க்கின்றவர்கள் எவர் ஒருவருக்கும் ஒருபோதும் கீழ்ப்படிய மாட்டோம். எவரேனும் உங்களுடன் சண்டையிட்டால், உங்களுடைய அணியில் நாங்கள் சண்டையிடுவோம்” என்று எவ்வாறு அவர்கள் கூறினார்கள் என்பதையும் நீர் கவனித்திருக்கின்றீரா. அவர்கள் பொய்யர்கள் என்பதற்கு கடவுள் சாட்சி கூறுகின்றார்.
[59:13] உண்மையில், கடவுள் மீது அவர்களுடைய அச்சத்தைக் காட்டிலும், அவர்களுடைய இதயங்களில் அதிகமான அச்சத்தை நீங்கள் ஏற்படுத்துகின்றீர்கள். இது ஏனெனில், அவர்கள் கிரகித்துக்கொள்ளாத மக்களாக இருக்கின்றனர்.