குர்ஆன் 59:11 — வெளியேற்றம்
நயவஞ்சகத்தால் பீடிக்கப்பட்டவர்களை, மேலும் வேதத்தையுடைய மக்களுக்கிடையில் நம்பமறுத்தலில் உள்ள தங்களுடைய தோழர் களிடம் அவர்கள், “நீங்கள் வெளியேற்றப் பட்டால் நாங்களும் உங்களுடன் சேர்ந்து வெளியில் வந்து விடுவோம், மேலும் உங்களை எதிர்க்கின்றவர்கள் எவர் ஒருவருக்கும் ஒருபோதும் கீழ்ப்படிய மாட்டோம். எவரேனும் உங்களுடன் சண்டையிட்டால், உங்களுடைய அணியில் நாங்கள் சண்டையிடுவோம்” என்று எவ்வாறு அவர்கள் கூறினார்கள் என்பதையும் நீர் கவனித்திருக்கின்றீரா. அவர்கள் பொய்யர்கள் என்பதற்கு கடவுள் சாட்சி கூறுகின்றார்.
[59:10] அவர்களுக்குப் பின்னர் நம்பிக்கையாளர் களாக ஆனவர்கள், “எங்கள் இரட்சகரே, எங்களையும் மேலும் விசுவாசம் கொள்வதில் எங்களை முந்தியவர்களான எங்களுடைய சகோதரர்களையும் மன்னிப்பீராக, மேலும் நம்பிக்கை கொண்டவர்கள் பால் எந்த வெறுப்பும் கொண்டிருப்பதிலிருந்து எங்கள் இதயங்களைத் தடுத்து விடுவீராக. எங்கள் இரட்சகரே, நீர் இரக்கமுடையவராக, மிக்க கருணையாளராக இருக்கின்றீர்” என்று கூறுகின்றனர்.
[59:12] மெய்யாகவே, அவர்கள் வெளியேற்றப் பட்டிருந் தால், அவர்களுடன் சேர்ந்து அவர்கள் வெளி யேறிச்சென்று இருக்க மாட்டார்கள், மேலும் எவரேனும் அவர்களுடன் சண்டையிட்டிருந் தால், அவர்களுக்கு அவர்கள் ஆதரவளித் திருக்க மாட்டார்கள். அவர்களுக்கு அவர்கள் ஆதரவளித்திருந்தாலும் அவர்கள் புறங் காட்டித் திரும்பி ஓடியிருப்பார்கள். அவர்கள் ஒருபோதும் வெற்றி பெற்றிருக்க இயலாது.